புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் வரும் 7 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டி யிட்டது. 25 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி, 18 இடங்களில் வெற்றிபெற்றது. இந்நிலையில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 7 ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் வரும் 7 ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.







