தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 23,286 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,72,602 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,29,79,687 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து 20,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 11,29,512 ஆக உள்ளது. கடந்த ஒரே நாளில் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,779 ஆக உள்ளது.







