உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம் சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதற்காக வீரர்கள் தயாராக இருந்தனர்.
முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சவுத்தாம்டனில் நேற்று காலை முதலே மழை பெய்து வந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதமானது. போட்டிக்கான டாஸ் போடப்படாத நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால், முதல் பாதி ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்துவந்ததால், முழு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்கிறது.
அணி விவரம்:
இந்தியா: விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், டேவோன் கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கிராண்ட்ஹோம், ஜேமீசன், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், நீல் வாக்னர்.







