இலங்கை-சீனா நட்பு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: இந்திய கடற்படை எச்சரிக்கை

இலங்கையில் சீனா துறைமுகப் பணிகளை மேற்கொள்வது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என இந்திய கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜி.அசோக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஜி.அசோக்குமார் அளித்துள்ள பேட்டியில்…

இலங்கையில் சீனா துறைமுகப் பணிகளை மேற்கொள்வது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என இந்திய கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜி.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஜி.அசோக்குமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

“இந்தியாவின் கடல் எல்லைகளை பாதுகாப்பதில் கடற்படை நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே எந்த ஒரு நாடும் நமது கடல் எல்லையில் அத்துமீற முடியாது. இலங்கையில் சீனா துறைமுகப் பணிகளை மேற்கொண்டு வருவது அச்சுறுத்தலா இல்லையா என்று ஆய்வு செய்வது மிகவும் சிக்கலான விஷயம்.

ஒரு நாடு, தங்கள் நாட்டின் பெரும்பாலான ஆற்றல் வளங்களை இந்த பிராந்தியத்தின் வழியே எடுத்துச் செல்வது என்ற காரணத்துடன் அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தோடு தொடர்பு இல்லாத அந்த நாடு, நமது பிராந்தியத்தின் மீது அதிக அக்கறை காட்டுவது நமக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

எனவே இத்தகைய நடவடிக்கைகளை நெருக்கமாக கண்காணிப்பதை உறுதி செய்வது நமக்கு அவசியமானதாகும். இது போன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

மும்பையில் நடைபெற்ற 26/11 தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னர் கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடற்பகுதியை விரிவாக கண்காணிப்பதற்கான பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, கடல் வழியே அத்துமீறுவது என்பதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு.”

இவ்வாறு இந்திய கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜி.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.