புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு
1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, போன்ற நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.அதனைத்தொடரந்து அதிகாலை 5 மணிக்கு திருபள்ளி எழுச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வழக்கமான கால பூஜைகள் தொடரந்து நடைபெறுகிறது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறக்கூடிய விஸ்வரூப தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதலே கோவிலில் குவிதிருந்தனர்.
1 மணிக்கு நடை திறக்கபட்டதும் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா என்ற கோசத்துடன் முருகனை வழிபட சென்றனர். மேலும் வருடத்தின் முதல் நாளான இன்று சாமிதரிசனம் செய்தால் ஆண்டிற்கான மொத்தபலனும் கிடைக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரித்தனம் செய்து வருகின்றனர்.