ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு முதல் கொண்டாடங்கள் களைகட்டியது.
2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, போன்ற நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்னதனர்.
தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள், கேளிக்ககை விடுதிகள் மற்றும் பொது இடங்களிலும் புத்தாண்டு கொண்டாடட்டங்கள் நடைபெற்றது. கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.







