கொரோனா போன்று சீனாவில் புதிய வைரஸ்

சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த…

சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு சீனாவில் உள்ள மக்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து சோதனை நடத்தியபோது இந்த வைரஸ் பற்றி மருத்துவர்கள் அறிந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கி இதுவரை யாரும் இறக்கவில்லை என சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லங்கையா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை வேறு சில மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டு வருதவதாக சீன மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வைரஸ் தாக்குதல் உணவு பழக்க வழக்கத்தால் ஏற்பட்டதாக என ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.