சிக்கலை தந்த புதிய அப்டேட்; அப்டேட்டுக்கு அப்டேட் கொடுத்து தீர்த்து வைத்த வாட்ஸ்அப்

வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் ஏற்பட்ட ஏற்பட்ட சிக்கலை புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் சரிசெய்துள்ளது. உலகம் முழுவதும் பல கோடி செல்போன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருந்துவருகிறது. மேலும் அவ்வப்போது…

வாட்ஸ் அப் பீட்டா வெர்சனில் ஏற்பட்ட ஏற்பட்ட சிக்கலை புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் சரிசெய்துள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி செல்போன் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருந்துவருகிறது. மேலும் அவ்வப்போது பல்வேறு புதிய அம்சங்களை கொடுத்து வாடிக்கையாளர்களின் விரும்பத்தக்க செயலியாக உள்ளது. அந்த வகையில் தற்போது ஆன்ராய்டு போனில் பீட்டா பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்தது.

அதை அப்டேட் செய்த பயனர்கள் சிலருக்கு செயலி ஓபன் ஆகாமலும், மற்றவர்களுக்கு வீடியோ, புகைப்படம் அனுப்பும்போதும் சிக்கலை சந்தித்துள்ளனர். இதுகுறித்து பயனர்கள் அளித்த புகாரையடுத்து புதிய அப்டேட் ஒன்றை கொடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் அந்த பிரச்னையை சரி செய்துள்ளது.

 

இதைத் தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அறிவுறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  பீட்டா பயனாளர்கள் தங்களது செயலியை அப்டேட் செய்வதற்கு முன்பாக மெஸ்ஸேஜை பேக் அப் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம், பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டாலும் அவர்களின் மெஸ்ஸேஜ் மற்றும் முக்கியமான தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.