“எக்ஸ் இஸ் லைவ்”: சமூக வலைதளத்தில் வைரலாகும் ட்விட்டரின் புதிய லோகோ!

புதிய லோகோவுடன் ட்விட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். ஊழியர்கள் பலரை வேலையை விட்டு தூக்கிய அவர்,…

புதிய லோகோவுடன் ட்விட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். ஊழியர்கள் பலரை வேலையை விட்டு தூக்கிய அவர், சிஇஓ பராக் அக்ரவாலையும் பணியில் இருந்து நீக்கினார். ட்விட்டர் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார். அவரின் நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்த போதும் அதைப்பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

மேலும் வெரிபைட் பயனர்கள் நாள்தோறும் 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் அடுத்த அறிவிப்பையும் எலானன் மஸ்க் வெளிட்டார் ட்விட்டரின் புதிய வாடிக்கையாளர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி ட்விட்டருக்கு புதிய லோகோவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதுதொடர்பான யோசனைகளை பகிருமாறு ட்விட்டர் யூசர்களை எலான் மஸ்க் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது புதிய லோகோவை அவர் தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். எக்ஸ் இஸ் லைவ்” என்ற புதிய லோகோவுடன் ட்விட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை இணைத்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

“வாழ்த்துக்கள், எலான். ட்விட்டர் என்றாலே அந்த பறவை தான் நினைவுக்கு வரும். அதனை கண்டிப்பாக தற்போது மிஸ் செய்வேன், ஆனால் நீங்கள் நீண்ட நாட்களாக உருவாக்க விரும்பும் ஒன்றை தேர்வு செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் கற்பனைப்படியே அனைத்தும் நல்லபடியாக நடக்கும்” என ட்விடர் பயனர் ஒருவ்ர் தெரிவித்துள்ளார். இதேபோல் ஏராளமான ட்விட்டர் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.