முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம்

தீயை முன்பே கண்டறிந்து எச்சரிக்கை விடும் புதிய தொழில்நுட்பம்

காட்டுத்தீ பற்றும் முன்பே ஹைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களைக் கண்டுணர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் புதிய டிரைட் என்ற தொழில்நுட்பத்தை இத்தாலி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள மான்டிஃபெரு காட்டில் காட்டுத்தீ பற்றிய புதிய “அல்ட்ரா-அர்லி” எச்சரிக்கை அமைப்பை, டிரைட் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் தீயணைப்பு வீரர்களின் மதிப்புமிக்க நேரத்தையும், கட்டுப்பாட்டை மீறி பரவும் தீயை அணைக்கக் கூடுதல் வாய்ப்பையும் வழங்குகிறது என டிரைட் கூறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் போன்ற கேமரா அமைப்புகள் தீயை ‘பார்’ என்று கூறினால், டிரையாடின் சில்வானெட் அவற்றை ‘நுகர்’ என்று கூறும்’ என அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

தற்போதுள்ள காட்டுத்தீ கண்டறிதல் அமைப்பில் என்ன பிரச்சனை?
செயற்கைக்கோள் இமேஜிங் மூலம், தரையில் வைக்கப்படும் கேமராக்கள் அல்லது நேரடி மனித பார்வையாளர்கள் மூலம் புகையையோ அல்லது தீயையோ கண்டறிந்து கூறும் எச்சரிக்கை அமைப்புகள் ஏற்கனவே உள்ளன.

இருப்பினும், இந்த பாரம்பரிய தீ கண்காணிப்பு அமைப்புகள் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களைப் பயன்படுத்தி ஒரு பகுதியை புகை அல்லது தீப்பிழம்புகளை அடிப்படியாகக் கொண்டு எச்சரிக்கை தரவுகளைத் தருகிறது. ஆனால் வறண்ட நிலப்பரப்புகளுடன் காட்டுத் தீ மிக விரைவாகப் பரவுகிறது. அவை தொடங்கியவுடன் அவற்றைக் கண்டறிந்து எச்சரிக்கை தரவுகளை அனுப்புவதற்குள் தீ கட்டுக்குள் அடங்காமல் பரவி விடுகிறது.

டிரையாட் தொழில்நுட்பம் தான் தீர்வு:

காட்டுத்தீ பற்றும் முன்பே பைரோலிசிஸ் மூலம் வெளிப்படும் புகை, ஹைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களை முன்கூட்டியே கண்டுணர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு மதிப்புமிக்க நேரத்தையும், கட்டுப்பாட்டை மீறி பரவும் தீயை அணைக்கக் கூடுதல் வாய்ப்பையும் வழங்குகிறது என டிரைட் கூறுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது?

இந்த தொழில்நுட்பத்தின் சென்சார் மூலம் ஆரம்பக் கட்ட காட்டுத் தீயைக் கண்டறிய முடியும் என டிரைட் கூறுகிறது. மேலும் ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்களை பிபிஎம் மட்டத்தில் அமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் நம்பத்தகுந்த முறையில் தீயைக் கண்டறிந்து உரிய நேரத்தில் எச்சரிக்கை தரவுகளை அனுப்பும்.

இந்த எச்சரிக்கை தரவு பரிமாற்றத்திற்கு மெஷ் கேட்வேஸ் மூலம் வயர்லெஸ் சென்சார் LoRaWAN தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துகிறது. இதற்கு நேரடி 4G/LTE ரேடியோ அல்லது ஈதர்நெட் இணைப்பு தேவையில்லை. எனவே இந்த தொழில்நுட்பத்தை சோலார் பேனல் போன்ற குறைந்த சக்தி மூலத்தில் இயங்க முடியும்.

மேலும், பகுப்பாய்வு கண்காணிப்பு மற்றும் உள்ளூர் தீயணைப்புப் படையின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைத் துல்லியமான ஜிபிஎஸ் ஆயத்தொகுப்புகளுடன் எந்நேரமும் தயாராக இருக்கும் வண்ணம் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக உட்கட்சி பிரச்சனை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Web Editor

“மகள் உயிருடன் இருக்கிறாள்” – இந்திராணி முகர்ஜி சிபிஐக்கு கடிதம்

Halley Karthik

தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

Dinesh A