உலகம் இந்தியா செய்திகள்

இந்திய வைரத்திற்கு மீண்டும் கௌரவம்: லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்!

லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம்  இடம் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸும், அரசியாக அவரின் மனைவி கமீலாவும் அண்மையில் முடிசூட்டப்பட்டனா். பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தில் கோஹினூா் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்தார். ஆனால், இந்த வைரத்தை இந்தியா சொந்தம் கொண்டாடுவது உள்பட பல்வேறு சர்ச்சைகள் உள்ளதால், அந்த கிரீடத்தை அணிவதை இங்கிலாந்து ராணி கமீலா பார்க்கர் தவிர்த்து விட்டார். அவர் அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தை அவர் அணிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரமாக கருதப்படும் 105 கேரட் மதிப்புள்ள கோஹினூர் வைரம், இந்தியாவின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்து பிரிட்டன் மகாராணியாக இருந்த எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது. இந்த வைரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரம் பல சாம்ராஜ்யங்களுக்கு இடையே கைமாறியது தொடா்பான வரலாற்றுத் தகவலும் காணொலியாக இடம்பெறும் எனவும், வரும் நவம்பா் வரை இந்தக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பிரிட்டன் அரண்மனைகளை நிா்வகித்து வரும் ’ஹிஸ்டாரிக் ராயல் பேலசஸ்’ அறக்கட்டளையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ”கோஹினூா் வைரம் உள்ளிட்ட பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பல்வேறு பொருள்களின் வரலாற்றுத் தகவல்கள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

போா் வெற்றியின் அடையாளமாகத் திகழும் கோஹினூா் வைரமானது, முகலாயா்கள், ஈரானின் ஷா ஆட்சியாளா்கள், ஆப்கனின் எமீரா்கள், சீக்கிய மகாராஜாக்கள் எனப் பல சாம்ராஜ்யங்கள் வழியே கைமாறியுள்ளது. இது தொடா்பாக வரலாற்று ஆசிரியா்கள் உள்ளிட்டோரிடம் விரிவான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 1849-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி பஞ்சாப் மகாராஜா துலீப் சிங், பஞ்சாபையும் கோஹினூா் வைரத்தையும் பிரிட்டன் சாம்ராஜ்ய மகாராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்க நோ்ந்தது. 1852-ம் ஆண்டில் பிரிட்டன் பாரம்பரியத்துக்கு ஏற்ப வைரம் பட்டை தீட்டப்பட்டது. அப்போது முதல் அரசா்கள் /அரசிகளின் கிரீடத்தில் கோஹினூா் வைரம் பொருத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு வைரத்தின் மாதிரியை கிரீடத்தில் பொருத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்வு!

Gayathri Venkatesan

திருச்சி நகை கொள்ளையில் திருப்பம் : 4மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை கைது செய்த போலீஸ்

Web Editor

’வயசானா படிக்கக் கூடாதா என்ன?’ 104 வயதில் 89 மார்க் எடுத்த வாவ் பாட்டி!

EZHILARASAN D