திருமண விழா பேனருக்கு பாதுகாப்பாக நின்ற திமுகவினர்!

கடலுாரில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவின் பேனரை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற எம்.எல்.ஏ மற்றும் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாநகராட்சி 8 வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி ரங்கநாதன்…

கடலுாரில் திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவின் பேனரை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற எம்.எல்.ஏ மற்றும் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாநகராட்சி 8 வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி ரங்கநாதன் என்பவரின் மகன் சதீஷ்க்கு திருமணம் நடைபெற்றது. இதனால் கடலுாரில் பல்வேறு பகுதியில் மாநகராட்சி, போலீசாரிடம் அனுமதி பெற்று திருமண பதாகைகள் வைக்கப்பட்டன. ஏற்கனவே திமுக மாமன்ற உறுப்பினர் சுமதி ரங்கநாதன் மாநகராட்சி மேயர் சுந்திரிராஜா தனது வார்டை முற்றிலும் புறகணிப்பதாக கூறி வீடு வீடாக நோட்டீஸை கடந்த மாதம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி மீறி பேனர் வைக்கப்பட்டதாக கூறி பேனர்கள் அகற்றப்பட்டன. இது குறித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையிலான திமுகவினர் பேனருக்கு பாதுகாப்பாக அமர்ந்தனர். இதனால் பரபப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.