தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய புதிய திட்டம்

குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக அவசர முன்பதிவு (தட்கல்) திட்டத்தை பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால்,…

குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக அவசர முன்பதிவு (தட்கல்) திட்டத்தை பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், அவசர தேவைக்காக குறுகிய கால அவகாசத்தில் ஆவணப்பதிவு செய்ய விரும்புவோருக்கு உரிய நேரத்தில் ஆவணப்பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகிறது. இதனை போக்கும் விதமாக குறுகிய கால அவகாசத்தில் ஆவணப்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.5,000 கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளும் தட்கல் நடைமுறையை பத்திரப்பதிவுத்துறை அமல்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்தி: ‘வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்வு; இன்று முதல் அமல்’

அதிக எண்ணிக்கையிலான ஆவணப்பதிவு நடைபெறும் சுமார் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் அவசர முன்பதிவு திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 பேர் வரை அவசர முன்பதிவு செய்து கொள்ள பத்திரப்பதிவுத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவசர முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.5,000 கட்டணமாக செலுத்தி ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.