வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்வு; இன்று முதல் அமல்

இன்று முதல் வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான…

இன்று முதல் வாகனங்களின் மீதான இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியக்கட்டணம் 30% வரை உயர்த்தப்படுவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக செலுத்தப்படும் பிரீமியமும் உயரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையமும், மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகமும், கலந்து ஆலோசித்து இந்த பிரிமியக் கட்டண உயர்வு முடிவை எடுத்துள்ளன. பொது பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுடன், ஒப்பிடும் போது, கல்வி நிறுவன பேருந்துகள்,வேன்களுக்கு பிரீமியத்தில் 15% தள்ளுபடி உண்டு.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ள கட்டண உயர்வு, உடனடியாக அமலுக்கு வருவதால் ஏற்கனவே இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தியவர்கள் இனி கூடுதல் பிமியத்தை செலுத்த வேண்டியிருக்கும். கடந்த இரு ஆண்டுகளாக மோட்டார் வாகனங்களின் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் -பிரீமியம் மாற்றப்படாமல் இருந்தது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் இழப்பீட்டில் உரிமை கோரும் போது தீர்ப்பாயங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களை வழங்க சொல்லும் இழப்பீடும் அதிகரித்து வருவதும் முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

பொதுவாக மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால் விபத்து ஏற்பட்டால் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் வாகனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் தகுந்த இழப்பீடு கிடைக்கும். மூன்றாம் நபர் பாலிசி என்பது பயணிக்கும் வாகனத்தால், பாதிக்கப்பட்ட வாகனம் மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்கள் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும்.

அண்மைச் செய்தி: ‘பிரபல பாடகர் கேகே உயிரிழப்பு – பிரபலங்கள் இரங்கல்’

அதன்படி, 150சிசிக்கு மேல் உள்ள 2 சக்கர வாகனங்கள்-15% உயர்வு, 1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்கள்-6% உயர்வு, 1000சிசி புதிய தனியார் கார்- 23% கூடுதல், 1000-1500 சிசி வரையிலான புதிய தனியார் கார் ஒராண்டு 11% கூடுதல், 1500சிசிக்கு கீழ் உள்ள காருக்கு பிரீமியம் குறைவு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு 15% தள்ளுபடி, புதிய இரு சக்கர வாகனங்களுக்கு 17% உயர்வு, 75 சிசிக்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு பிரீமியம் 175% உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவ செலவுகள் அதிகரிப்பால் வாடி வரும் மக்களுக்கு, இன்சூரன்ஸ் பிரீமியக்கட்டண உயர்வு, நிதிச்சுமையையும், மன அழுத்த சுமையையும் தரும். எனவே இந்த பிரீமிய கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்தாலோ அல்லது கட்டண உயர்வை கணிசமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.