முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மோடி அமைச்சரவை 2.0 : 43 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமைச்சரவையில் இதுவரை மாற்றம் செய்யப் படவில்லை. அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள
உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளை பாஜக தலைமை எடுத்து வருகிறது.

அதற்கு ஏற்ப, மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக முடிவு செய்துள்ள தாகக் கூறப்படுகிறது. மேலும் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் விலகியதால் அவற்றின் சார்பில் இடம்பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதையொட்டி அவர் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பதற்கு வசதியாக சில மத்திய அமைச்சர்கள் இன்று திடீரென தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில், 43 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியிடப் பட்டது. பின்னர் அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாண மும் செய்து வைத்தார்.

இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சர்கள் விவரம்:

1. நாரயண் ராணே (மகாராஷ்டிரா), 2. சர்பானந்தா சோனாவால் (அசாம்), 3. வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்), 4. ஜோதிராத்ய சிந்தியா (மத்தியபிரதேசம்), 5. ராமச்சந்திர பிரசாத் சிங் (பீகார்), 6. அஸ்வினி வைஷ்ணவ் (ஒடிசா), 7. பசுபதி குமார் பாரஸ் (பீகார்), 8.
கிரண் ரிஜிஜூ (அருணாச்சலபிரதேசம்), 9. ராஜ்குமார் சிங் (பீகார்), 10. ஹர்தீப் சிங் புரி (டெல்லி), 11. மன்சுக் மண்டவியா (குஜராத்) 12. பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்), 13. பர்சோத்தம் ருபாலா (குஜராத்), 14. கிஷண் ரெட்டி (தெலங்கானா), 15. அனுராக் சிங்
தாகூர் (இமாச்சலப்பிரதேசம்), 16. பங்கஜ் சவுத்ரி (உத்தரபிரதேசம்), 17. அனுப்பிரியா படேல் (உத்தரபிரதேசம்), 18. சத்யபால் சிங் (உத்தரபிரதேசம்), 19. ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), 20. ஷோபனா கரண்டா (கர்நாடகா), 21. பானுபிரதாப் சிங் வர்மா (உத்தரபிரதேசம்), 22. தர்ஷன் விக்ரம் ஜர்தோஷ் (குஜராத்), 23. மீனாட்சி லேகி (டெல்லி), 24. அன்னபூர்ணா தேவி (ஜார்கண்ட்), 25. ஏ.நாராயணசாமி(கர்நாடகா), 26 கவுசல் கிஷோர் (உத்தரபிரதேசம்), 27. அஜய் பட்(உத்தரகாண்ட்), 28. பி.எல் வர்மா (உத்தரபிரதேசம்), 29. அஜய்குமார் (உத்தரபிரதேசம்), 30. சவுகான் தேவுசிங் (குஜராத்), 31. பகவந்த்குபா (கர்நாடகா), 32. கபில் மோரேஸ்வர் பட்டீல் (மகாராஷ்டிரா), 33. சுஷ்ரி பிரதிமா பவுமிக் (திரிபுரா), 34. சுபாஸ் சர்கார் (மேற்குவங்கம்), 35. பகவத் கிருஷ்ணராவ் காரத் (மகாராஷ்ட்ரா), 36.ராஜ்குமார் ரஞ்சன் (மணிப்பூர்), 37. பாரதி பிரவீன் பவார் (மகாராஷ்டிரா), 38. பிஸ்வேஷ்வர் துடு (ஒடிசா), 39. சாந்தனு தாகூர் (மேற்குவங்கம்) , 40., முஞ்சப்பாரா மகேந்திரபாபு (குஜராத்) 41. ஜான் பார்லா, (மேற்குவங்கம்) 42. எல்.முருகன் (தமிழ்நாடு), 43. நிஷித் பரமானிக் (மேற்கு வங்கம்).

Advertisement:
SHARE

Related posts

காதலி, அவரது தாயை கொன்று, காதலன் தற்கொலை!

Niruban Chakkaaravarthi

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பா? : முதல்வர் பழனிசாமி விளக்கம்!

Saravana

‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

Halley karthi