பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அதிகம் இடம்பிடித்துள்ளனர்.
முதுகலை மற்றும் முது அறிவியல் கல்வி முடித்த 13 பேர் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முடித்த 8 பேர் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். வழக்கறிஞராக உள்ள 5 பேருக்கும் தற்போது அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
புதிய அமைச்சர்களில், 4 பேர் மருத்துவர்கள் என்பதும், 4 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தொழில்நுட்பக்கல்வி முடித்த மூவர், பொறியியல் கல்வி முடித்த ஒருவரும் இடம்பெற்றுள்ளார். ஒருவர் சுயதொழில் செய்பவர் எனும் நிலையில், ஒருவர் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தும், 3 பேர் பள்ளிக்கல்வியை நிறைவு செய்யாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது
அமைச்சர்களின் கல்வி விவரம்:
நாராயணன் ரானே -10ம் வகுப்பு
சர்பானந்த சோனோவால் – எல்.எல்.பி
வீரேந்திர குமார் – பிஹெச்.டி
ஜோதிராதித்ய சிந்தியா – எம்.ஏ
ராம்சந்திர பிரசாத் சிங் – எம்.ஏ
அஷ்வினி வைஷ்ணவ் – எம்.ஏ
பசுபதி குமார் பராஸ் – எம்.ஏ
கிரண் ரிஜிஜு – எல்.எல்.பி
ராஜ்குமார் சிங் – எல்.எல்.பி
ஹர்தீப் சிங் புரி – எம்.ஏ
மன்சுக் மன்டவியா – எம்.ஏ
பூபேந்தர் யாதவ் – பி.ஏ.
புருஷோத்தம் ரூபலா – எம்.ஏ
கிஷன் ரெட்டி – டிப்ளமோ
அனுராக் சிங் தாக்கூர் – பி.ஏ.
பங்ஜக் சவுத்ரி – பி.ஏ
அனுப்ரியா சிங் படேல் – எம்.ஏ.
சத்ய பால் சிங் பாகல் – பிஹெச்.டி
ராஜீவ் சந்திரசேகர் – எம்.ஏ.
சோபா கரண்ட்லஜே – எம்.ஏ.
பானு பிரதாப் சிங் வர்மா – எம்.ஏ.
தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் – பி.ஏ.
மீனாட்சி லேகி – எல்.எல்.பி.
அன்ன்பூர்னா தேவி – எம்.ஏ.
ஏ.நாராயணசாமி – சுயதொழில்
கவுஷல் கிஷோர் – +2
அஜய் பட் – பி.ஏ., எல்.எல்.பி
பி.எல். வர்மா – எம்.ஏ
அஜய் குமார் – 9ம் வகுப்பு
சவுகான் தேவ்சிங் – டிப்ளமோ
பகவந்த் கூபா – பி.டெக்
கபில் மோரேஷ்வர் பாட்டீல் – பி.ஏ.
சுஷ்ரி பிரதிமா பவுமிக் – பி.ஏ.
சுபாஷ் சர்கார் – எம்பிபிஎஸ்
பகவத் கிருஷ்ணராவ் காரத் – எம்பிபிஎஸ், எம்எஸ், எம்சிஹெச்
ராஜ்குமார் ரஞ்சன் சிங் – பிஹெச்.டி
பாரதி பிரவீன் பவார் – எம்பிபிஎஸ்
பிஷ்வேஸ்வர் துடு – டிப்ளமோ
சாந்தனு தாகூர் – பி.ஏ
முஞ்சப்பரா மகேந்திர பாய் – எம்பிபிஎஸ், எம்டி
ஜான் பார்லா – 9ம் வகுப்பு
எல் முருகன் – பிஹெச்.டி
நிஷித் பரமானிக் – பி.சி.ஏ







