சென்னை, கோவை உள்பட 35 நகரங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் மனிதவளத்துறைத் தலைவர் தீப்தி வர்மா இதை தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, இந்தியாவில் சென்னை, கோவை, பெங்களூரு, லூதியானா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, நொய்டா, அமிர்தசரஸ், புனே உள்ளிட்ட 35 நகரங்களில் உள்ள 8 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக தெரிவித்து ள்ளார்.
தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் மனிதவளம், நிதி, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் இளைஞர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் , 2025-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், கொரோனா காலத்திலும் 3 லட்சம் பேருக்கு நேரடியாக வும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார். 16-ம் தேதி இந்தியாவில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் முகாம் நடத்த இருப்பதாகவும் காணொலி மூலம் நடக்கும் இந்த முகாமில், 140 அமேசான் ஊழியர்கள் பயிற்சி முகாம்களையும் நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.








