முக்கியச் செய்திகள் தமிழகம்

பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம்: பா.ம.க. வலியுறுத்தல்

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் கொண்டு வந்தது அதனை அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் அரசுத்துறை பதவி உயர்வில் வழங்கப்பட்ட ஓபிசி இட ஒதுக்கீடு செல்லாது என 02.09.2020 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சமூகநீதிக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அப்போதே வலியுறுத்தியிருந்தேன்.

எனது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதும், சமூகநீதி சார்ந்த வழக்குகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார் வல்லுனர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவை, நீதிமன்ற ஆய்வுகளை தாங்கும் வகையில் வலிமையாக தயாரித்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி யோசனை

Jayakarthi

‘மாணவர்கள் சாதி கயிறு கட்டுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும்’

Arivazhagan Chinnasamy

சென்னையை தொடர்ந்து ஐதராபாத்திலும் இயக்குநர் ஷங்கர் மீது லைகா வழக்கு!

Gayathri Venkatesan