பாஜக அரசில்தான் இந்தித் திணிப்பு இல்லை: அண்ணாமலை

பாஜக அரசில்தான் இந்தி மொழித் திணிப்பு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில்…

பாஜக அரசில்தான் இந்தி மொழித் திணிப்பு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பாஜகவை அடி மட்டத்திலிந்து வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இன்றிலிருந்து 60 நாட்கள் பூத் அளவில் மக்களை சந்திக்க திட்டம். எனது பூத் வலிமையான பூத் எனும் திட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

1986 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கல்வி கொள்கைப்படி இந்தி 2 ஆம் மொழியாக இருந்ததாகவும், அக்காலகட்டத்தில் இந்தி இந்தி மொழி கட்டாயப் பாடமாக திணிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், 2020 ல் புதிய கல்வி கொள்கையின் படி இந்தி 3 வது மொழியாக மாற்றப்பட்டது, பாஜக அரசில் தான் இந்தி மொழி திணிப்பு இல்லை என்று தெரிவித்தார்.

5ஆண்டுகளில் தமிழகம் எங்கே செல்லும் என்ற அச்சம் பொது மக்களுக்கு உள்ளது, குஜராத் தேர்தல் முடிவு என்பது சரித்திரத்தில் ஏற்கனவே இருந்ததை விட ஒரு சீட் கூடுதலாக பெற்று பாஜக வெற்றிபெறும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.