முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

பார்வையாளர்கள் வருகையில் புதிய சாதனை படைத்த நியூலேண்ட் மைதானம்!

ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலேயே இறுதிப் போட்டிக்கு அதிக பார்வையாளர்கள் வருகை புரிந்த மைதானம் என்ற பெருமையை தென் ஆப்ரிக்காவின் நியூ லேண்ட் மைதானம் பெற்றுள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய பெத் மூனி அரைசதம் அடித்தார். பெத் மூனி 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : ரிக்கி பாண்டிங், தோனி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்!

157 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. அபாரமான பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்கா அணி ரன்கள் எடுக்கமுடியாமல் திணறியது. ஆனாலும் இலக்கை விரட்ட கடுமையாக முயற்சித்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

பொதுவாக மகளிர் கிரிக்கெட் போட்டி என்றால் மைதானத்தில் ரசிகர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படும். நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 இறுதிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் நியூ லேண்ட் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் மைதானம் வந்திருந்தனர்.

இதன் மூலம் ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட் தொடர்களிலேயே இறுதிப் போட்டிக்கு அதிக பார்வையாளர்கள் வருகை புரிந்த மைதானம் என்ற பெருமையை தென் ஆப்ரிக்காவின் நியூ லேண்ட் மைதானம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

+1 மாணவர்களுக்கு விரைவில் மிதிவண்டி- தமிழ்நாடு அரசு

G SaravanaKumar

” குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி “

Web Editor

5-வது முறையாக கர்நாடகத்திற்கு வருகை தந்த மோடி: மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

Web Editor