மகளிர் டி20 உலக கோப்பையை 6வது முறையாக கைப்பற்றி, அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய கேப்டன்களில் ரிக்கி பாண்டிங், எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் சாதனை படைத்துள்ளார்.
மகளிர் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் அடித்தது. தொடக்க வீராங்கனை அலைஸா ஹீலி 18 ரன்களும், ஆஷ்லே கார்ட்னெர் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
அதன்பின்னர் களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ்(10), லானிங்(10), எலைஸ் பெர்ரி (7) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீராங்கனை பெத் மூனி அரைசதம் அடித்தார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த பெத் மூனி 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
157 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. அபாரமான பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்கா அணி ரன்கள் எடுக்கமுடியாமல் திணறியது. ஆனாலும் இலக்கை விரட்ட கடுமையாக முயற்சித்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த வெற்றியினால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய கேப்டன்களில் ரிக்கி பாண்டிங், எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்கின் கேப்டன்சியில் முதல் முறையாக 2014ல் ஒருநாள் உலக கோப்பையை வென்றது. 2022ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையையும் மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்தார்.
2018, 2020 மற்றும் 2023ம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ச்சியாக 3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார் மெக் லானிங். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு மொத்தமாக 5 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்து, ரிக்கி பாண்டிங் மற்றும் தோனியின் சாதனைகளை முறியடித்துள்ளார்.