புதிய அரசு கண் மருத்துவமனை கட்டடம்:முதலமைச்சர் திறந்துவைத்தார்

எழும்பூரில் அமைந்துள்ள புதிய அரசு கண் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200 -வது ஆண்டை கொண்டாடும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி ரூபாய்…

எழும்பூரில் அமைந்துள்ள புதிய அரசு கண் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200 -வது ஆண்டை கொண்டாடும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி ரூபாய் செலவில் 6 தளங்களுடன் புதிதாக மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து , கட்டிடத்திற்கான கல்வெட்டையும் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு 63.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்துவைத்தார்.அத்துடன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை , திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை , தாம்பரம் அரசு தாலுக்கா மருத்துவமனை , திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வென்டிலேட்டர்கள் , அல்ட்ராசவுண்ட் மெஷின் உள்ளிட்ட 65.45 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

மொத்தமாக இன்றைய நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 195 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ சேவைகள் துவக்கி துவக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ் சேகர் பாபு மேலும் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.