மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

மாணவர்களின் குரள் நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் பிரதமர் குறித்து விமர்சித்ததை ராகுல்காந்தி ஆதரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாணவர்களின் குரள் நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் பிரதமர் குறித்து விமர்சித்ததை ராகுல்காந்தி ஆதரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக முன்னாள மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ மாணவர்களுடனான கலந்துரையாடல் என்பது இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், ஜனநாயக மாண்புகள் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைப்பதாக இருக்க வேண்டும்.
ஆனால், பிரதமர் குறித்து வெறுப்பையும் பகைமையையும் தூண்டும் வகையிலான கருத்துகள் முன்வைக்கப்படுவதும், பிரதமரின் தலையில் குட்டுவேன் என்று ஒரு மாணவர் கூற வைக்கப்பட்டு இருப்பதும் அவரை ராகுல் காந்தி ஆதரிப்பதும் மிகவும் தவறான முன்னுதாரணமாகும்.

கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை. ஆனால், மிரட்டலையும் வெறுப்பையும் ஊக்குவிப்பது பொறுப்புள்ள தலைமைக்கு அழகல்ல. இளைஞர்களுக்குத் தேவை ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், தேசப்பற்று, புதுமைகள் மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் உத்வேகம் — எதிர்மறை அரசியலும் வெறுப்புப் பேச்சுகளும் அல்ல! இந்தியாவின் எதிர்காலம் கருத்துகளால் கட்டமைக்கப்பட வேண்டும்; கலவரங்களால் அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.