“பொய் பிரச்சாரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்” என ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார். நிகழ்வில் பேசிய ஆளுநர், மத்திய அரசு மொழியை திணிக்கவில்லை என குறிப்பிட்டார். மேலும், புதிய கல்விக்கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நாங்கள் இந்திக்கு எதிர்ப்பாளர்கள் அல்ல, தேவைக்கு இந்தியை எடுத்து கொள்வோம் ஆளுநர் இதனை தயவு கூர்ந்து கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அமைச்சர், “விரும்புவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தி படிப்பவர்களுக்கு வேலை கிடைக்கிறதா? கோவையில் பாணி பூரி கடை நடத்துகிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
அண்மைச் செய்தி: ‘Whatsapp-ல் பணம் அனுப்புபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த செய்தி!’
மேலும், “புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்கள் இருந்தால் வரவேற்போம். ஆனால், தமிழ்நாடு கல்விக் கொள்கையை நிறுவ முதலமைச்சர் குழு அமைத்துள்ளார், தமிழ்நாட்டின் பிரச்சனைகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். இந்தியை கட்டயமாக்கக்கூடாது. 3வது மொழி எது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆளுநர் தமிழக மாணவர்களின் நிலை மற்றும் தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றும் கூறினார்.
இந்நிலையில், இந்திய அரசு ஒருபோதும் தமிழ்நாட்டின் மீது எந்த மொழியையும் திணிக்காது என்றும், பொய்ப் பிரச்சாரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதேசமயம், இன்று காலை 10 மணி விமானத்தில் ஆளுநர் டெல்லி புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில், மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிகிறது. புதிய கல்வி கொள்கை – இந்தி திணிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் கருத்து போர் நடைபெறும் நிலையில் ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம், தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.