கேரள நடிகை சஹானா தனது பிறந்தநாளன்று தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர் சஹானா. மாடலாகவும், அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்த சஹானா கோழிக்கோட்டில் தனது கணவருடன் வசித்து வந்தார். சஹானாவுக்கும், சஜாத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சஹானா தனது 20ஆவது பிறந்தநாளன்று தான் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஹானாவின் மரணம் குறித்து விசாரிக்க, சஜத்தை காவலில் எடுத்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஹானாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சஹானாவின் தாயார் உவேமா கூறுகையில், “கடந்த வியாழக்கிழமை எனது மகள் என்னைத் தொடர்புகொண்டாள். வெள்ளிக்கிழை என் மகளின் 20ஆவது பிறந்தநாள். அவளுடைய பிறந்தநாளைக் கொண்டாட என்னை வீட்டுக்கு அழைத்திருந்தாள். அப்போது, அவள் மிகவம் சந்தோஷமாகத்தான் இருந்தாள். அவள் உயிரை மாய்த்துக் கொள்வாள் என நான் நினைக்கவில்லை. என் மகள் எப்போதும் தன் கணவர் செய்த கொடுமைகளை பற்றிதான் பேசுவாள். நிச்சயம் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
ஒரு விளம்பரத்துக்காகப் பெற்ற காசோலையை சஹானாவிடம் சஜத் கேட்டுள்ளார். ஆனால் அதனை சஹானா கொடுக்க மறுத்துள்ளார். அப்போது, காசோலையைக் கொடுக்க மறுத்தால் கொன்றுவிடுவேன் என்று சஜத் மிரட்டியதாக என்னிடம் கூறினாள்” என்றார்.
வளர்ந்துவரும் இளம் நடிகையாந சஹானாவின் திடீர் மரணம் கேரள ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








