தென்காசி-செங்கோட்டை ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி!

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு 5 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்தாண்டு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து ஓரளவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. மேலும்…

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு 5 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் கடந்தாண்டு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து ஓரளவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் ரயில் இயக்கம் இல்லாமல் ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ரயில் பயணிகள் அனைவரையும் முழுமையான சோதனை செய்யப்பட முடியாத நிலை இருப்பதால் ரயில் நிலையங்கள் நவீன கண்காணிப்பு கருவி மூலம் அவர்களை சோதனை செய்யும் முறையை செயல்படுத்தப்பட்டு தனி அறை அமைக்கப்பட்டு அதில் கணிணி வசதியோடு கூடிய ஸ்கேனர் வசதியும் நவீன கேமராக்கள் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த ஸ்கேனர் மூலம் அவர்களது உடல் வெப்பநிலை கண்டறிந்த பின்னர் அவர் முன்பதிவு செய்த பயணச்சீட்டையும் ஸ்கேன் செய்த பின்னரே அவர் ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கும், பயணம் செய்வதற்குm அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழக கேரளா எல்லையான தென்காசி, செங்கோட்டை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பயணிகள் முறையாக பரிசோதனை செய்த பின்பே ரயில் நிலையத்திற்குள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு பணியில் இரண்டு அலுவலர்களும் ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரியும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.