சென்னையில், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்து முகக்கவசம் வழங்கி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை காரணமாக, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, சென்னையில், சாலைகளில் பயணம் செய்வோர் முகக்கவசம் அணிந்துள்ளனரா என போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒலிப்பெருக்கி வாயிலாகவும் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், முகக்கவசம் அணியாதவர்களை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கி முகக்கவசங்களையும் வழங்கி, முறையாக அணிந்து செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: