முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

புதிதாக 1,596 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், 1,59,684 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இதில் 1,596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 26,28,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,534 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,77,646 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 186 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 182 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 130 பேருக்கும், செங்கல்பட்டில் 108 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. அதிகபட்சமாக  கோவை மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – ரூ.160 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!

Vandhana

நாளை முதல் 50 % ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படவேண்டும்: தமிழக அரசு!

காதல் விவகாரத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழப்பு!

Jeba Arul Robinson