மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் வந்து சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தீயணைப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று(9ம் தேதி) சட்டப்பேரவையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1985 ஆம் ஆண்டு தீயணைப்பு சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் வந்து சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்களில் அமைவிடங்கள் அறிவியல்பூர்வமாக வரைபடங்களின் உதவியுடன் தேர்வு செய்யப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி பயிற்சி கருவிகள் மற்றும் சுய பாதுகாப்பு சீருடைகள் போன்றவை போதிய அளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு வழங்கப்பட்டு துறையின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.