முக்கியச் செய்திகள் இந்தியா

தினசரி தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிப்பு

தினசரி தடுப்பூசி போடும் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் விகே பால், ஐசிஎம்ஆர் தலைவர் பலராம் பார்கவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பண்டிகைகளின்போதும் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்த்தால் தொற்று பரவலை தடுக்கலாம் என பலராம் பார்கவா கூறினார்  பயணத்தின்போது முறையான வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ராஜேஷ் பூஷண், கடந்த மார்ச் மாதத்தில் நாள்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், தற்போது 78 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இதையடுத்து, குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஒருசில நாடுகளே அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இந்தியாவில் குழந்தைகளுக்கு போடும் சைடஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் விகே பால் கூறினார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக நடைபெறவில்லை என்றும் விகே பால் விளக்கம் அளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

துர்கா பூஜை பந்தலில் மம்தா பானர்ஜி சிலை: பாஜக எதிர்ப்பு

Gayathri Venkatesan

சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளை திருடும் கும்பல்!

ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்