செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மாநகராட்சியின் விதிப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை வழங்க நான்கு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் செல்லப்பிராணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது, திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் செல்லப்பிராணிகளின் சிகிச்சை மையத்தை பயன்படுத்தி அவற்றிற்கு இலவச சிகிச்சை அளித்துக் கொள்வதற்கு மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் கால்நடை மருத்துவ பிரிவின் சார்பில் நான்கு மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளது.
2021-2022 நிதியாண்டில் மட்டும் இந்த நான்கு மையங்கள் மூலமாக 21,020 செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ’வெறிநாய்க்கடி நோய் இல்லாத சென்னை’ என்ற இலக்கை எட்டும் வகையில் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றும், பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் கட்டணம் 50 ரூபாய் என்ற வகையில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையில் இந்த நான்கு மையங்களிலும் வழங்கப்படுகிறது.
.







