ஆளுநர் தமிழிசை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தால் பரபரப்பு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதில் தமிழக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாட சிறிது…

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதில் தமிழக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாட சிறிது நேரம் யாரும் முன்வராததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி தவளக்குப்பம், அரவிந்தர் கண் மருத்துவமனையில் நடைபெறும் கண் தான விழிப்புணர்வு முகாமைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட வேண்டும் என ஆளுநர் தமழிசை வலியுறுத்தினார், இதனை அடுத்து அங்கிருந்த மாணவி ஒருவர் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னரே நிகழ்ச்சி தொடங்கியது.

பின்னர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

நமது கண் வீணாக மண்ணுக்கு போவதற்கு பதில் அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும். தக்காளி காய்ச்சல் தற்போது புதுச்சேரியில் இல்லை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். கடந்த முறை போல இம்முறையும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை அரசு அறிவிக்கும்.

புதுவை புதுமையை பார்க்க இருக்கிறது. பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது, இந்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட்டாக உள்ளது என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.