அதிமுக ஆட்சியில் ஒரு துளி மழை நீர் கூட தேங்கியது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று பரவலான மழை பொழிவு இருந்தது. இதனால், சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை தங்க சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:
அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு துளி மழைநீர் கூட தேங்கியது இல்லை. திமுக ஆட்சி காலத்தில் சாலையில் தற்போதே மழைநீர் ஆனது தேங்கி உள்ளது. மழைக் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகளை திமுக செய்ய தவறியது.
நல்லா இருந்த தொகுதி தற்போது எந்த அடிப்படை வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நானும் மழை நீரில் நடந்து வந்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன்.
மக்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகளில் மக்களை அமர்த்தாமல் ஈகோ உடன் செயல் பாடுகின்றார்கள்.
இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் கையெழுத்திட்டு சம்பளம் வாங்குகிறார். ஆனால் இங்கிருக்கும் மக்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை.
இந்த தொகுதியில் இருக்கும் குழந்தைகளை கேட்டாலும் கூட இந்த தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் என்றுதான் தெரிவிக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.








