தமிழ் நாடு அரசின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது. அதன் படி தற்போது தமிழ் நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்…?
சாய் குமார், 1990 பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தருமபுரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2018 முதல் 2022 வரை அவரின் முதன்மை தனிச் செயலாளராக சாய் குமார் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.







