ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இணைந்த சிறுவனின் பதிவால் LinkedIn – ஐ வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்-ல் பணி புரிய தகுதி பெற்ற நிலையில் LinkedIn -ஐ அணுக தகுதியற்றவறாக தன்னை எப்படி கருத முடியும் என கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் 14 வயதே நிரம்பிய…

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்-ல் பணி புரிய தகுதி பெற்ற நிலையில் LinkedIn -ஐ அணுக தகுதியற்றவறாக தன்னை எப்படி கருத முடியும் என கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் 14 வயதே நிரம்பிய உலக புகழ் சிறுவன் கிரண் குவாஸி.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டதால் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தவர் 14 வயது மட்டுமே ஆன கிரண் குவாஸி. சாதனை புரிய வயது ஒரு தடையே இல்லை என நிருபித்த இந்த சிறுவன் தற்போது தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புயலை கிளப்பியுள்ளார். கிரண் குவாஸி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் எனக்கு 16 வயதாகாததால் LinkedIn – ல்எனது கணக்கை நீக்குகிறார்கள் என்றும், இது தொடர்ந்து எதிர்கொள்ளும் நியாயமற்ற, பழமையான முட்டாள்தனம் எனவும் விமர்சித்துள்ளார். 

உலகின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணி புரிய தனக்கு தகுதி இருக்கும் நிலையில், தொழில்முறை சமூக ஊடக தளமான LinkedIn – ஐ அணுகுவதற்கு தனக்கு தகுதி இல்லையா என கிரண் குவாஸி வினவியுள்ளார். அதோடு LinkedIn எவ்வளவு பின் தங்கியிருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார். 

இந்நிலையில் LinkedIn தரப்பில் இருந்து தனக்கு வந்த பதிலை இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரன் குவாஸி, இது குறித்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள் என பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் 16 வயதுக்கு உட்பட்டோரும் தொழில்முறை சமூக ஊடக தளமான LinkedIn – ஐ அணுகும் வகையில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பலர் LinkedIn – ஐ கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.