அமைச்சர் செந்தி பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு : முதன்மை நீதிமன்றம் உத்தரவு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ரிமாண்டை நிராகரிக்க கோரிய வழக்கின் விசாரனை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி ரிமாண்டை நிராகரிக்க கோரிய வழக்கின் விசாரனை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை  நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில் இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி விவாகரம் தொடர்பாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ, நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் முறையிட்டனர். வழக்கு பிற்பகல் 2:15 மணிக்கு விசாரிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில் நீதிபதி சக்திவேல் விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நடைமுறை பின்பற்றி புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார். அதன்படி நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வில் நீதிபதி சக்திவேல் விலகியதால் அந்த இடத்திற்கு உயர்நீதிமன்ற நடைமுறைப்படி வேறோரு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை வேறோரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று இருப்பதாகவும், இது குறித்து மருத்துவமனையில் உள்ள அமலாக்கத்துறையினரிடம்  அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வழக்கறிஞர்கள் வருகை தந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ரிமாண்ட் செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில் நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு வர உளளார் என தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து திமுக சட்ட வல்லுனர் இளங்கோவன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நீதிபதி அல்லி ஓமந்தூரர் மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் எந்த வாதங்கள் நடைபெறவில்லை. நீதிமன்றத்தில் வாதங்கள் வைத்துக் கொள்ளலாம் என நீதிபதி அல்லி தெரிவித்தார். மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் உடல்நிலை குறித்து தான் விசாரித்து வருகிறோம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்தார்.

இந்த நிலையில் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன்பிறகு அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு  வரும் 28ஆம் தேதி வரை  நீதிமன்ற காவல் வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற அமர்வு அறிவித்தது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் இந்த காவல் மருத்துவமனை காவலாக தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிமாண்ட் நிராகரிக்க வேண்டும் எனவும், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல். ஜாமீன் நிராகரிக்கப்பட்டால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என தனித்தனியே மனு அளித்தனர். ரிமாண்டை நிராகரிக்க வேண்டும் என வழக்கறிஞர் என் ஆர். இளங்கோ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அமைச்சரை கைது செய்வதற்கு முன் கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டன. கைது மெமோவை பெற அவர் மறுத்தார. கைது செய்யப்படுவொம் என தெரிந்தே அதை பெற மறுத்து விட்டார். ரிமாண்ட் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. இதனையடுத்து அவர் தனது சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சித்தார். செந்தில் பாலாஜியின் விசயத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. ரிமாண்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமீன் தான் கோர வேண்டும் என அமலாக்கப் பிரிவு தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.

போலீஸ் காவலில் எடுக்க கோரி அமலாகத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. போலீஸ் காவல் கோரிய மனு நிலுவையில் இருக்கும் போது, ஜாமீன் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே போலீஸ் காவல் கோரிய மனு மீது நாளை விசாரணை நடைபெறும். இந்த வழக்கு முடிந்து பின்பு ஜாமீன் கோரிய மனு விசாரிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.