33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நேதாஜியின் பேரன் பாஜகவில் இருந்து விலகல் – தனது கருத்துக்கள் மதிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு

நேதாஜியின் பேரன் பாஜகவில் இருந்து விலகல் தனது கருத்துக்கள் மதிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரனான சந்திர குமார் போஸ் மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர். கடந்த 2016 முதல் 2020 வரை அவர் மாநில துணைத் தலைவராக இருந்தார். இந்த நிலையில் இன்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிடமிருந்தும் விலகியதாக அறிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திர குமார் போஸ் தெரிவித்ததாவது..

“  எனது வழிகாட்டி மற்றும் தாத்தா சுபாஷ் சந்திர போஸின் சகோதரரான சரத் சந்திர போஸின் 134 வது பிறந்தநாளில்  இந்த முக்கியமான நான் எடுத்துள்ளேன்.  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது சகாக்கள் மதச்சார்பற்ற சித்தாந்தத்தை அடிப்படியாக கொண்ட  சுதந்திர இந்தியாவுக்கான போராடினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வளர்ச்சித் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு நான் 2016 இல் பாஜகவில் இணைந்தேன். அன்று முதல் மதம், சாதி வேறுபாடின்றி அனைத்து சமூகங்களையும் இந்தியராக ஒன்றிணைக்கும் நேதாஜியின் சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு பாஜகவின் கட்டமைப்பிற்குள் செயல்பட்டேன்.

 

“மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்கும்  முயற்சிகளுக்கு மத்திய பாஜக மற்றும் மேற்கு வங்க பாஜகவிடம் இருந்து எனக்கு எந்த ஆதரவையும் கிடைக்கவில்லை. மேலும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் கட்சியை வலுப்படுத்த “மேற்கு வங்க அரசியல் வியூகம்” எனும் விரிவான திட்டத்தை முன்வைத்தேன். எனது முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டன. இந்த துரதிர்ஷ்டவசமான சூழலில்தான் பாஜகவின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன் “ என சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கர்நாடகா தேர்தல் களம்- மைசூர் தலைப்பாகை யாருக்கு?

Jayasheeba

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷாவுக்கு மாரடைப்பு!

Web Editor

ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார்

Web Editor