சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இணைய தொடர் : ஹீரோவாக அசோக் செல்வன்!

ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் இணைய தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ்…

ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் இணைய தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

https://twitter.com/soundaryaarajni/status/1699346889404195162

இந்நிலையில், ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து இணையத் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். நோவா ஆபிரஹாம் இயக்கத்தில் உருவாகும் இத்தொடருக்கு கேங்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளனர். படப்பிடிப்பிற்கான பூஜை இன்று நடைபெற்றது. இத்தொடரில் நாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடிக்க உள்ளதையும் சௌந்தர்யா அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.