நேபாள நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.ஷர்மா அரசு தோல்வி!

நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. பிரதமர் ஷர்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட்…

நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது.

பிரதமர் ஷர்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றது. இதனால் ஷர்மா ஒலி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரதமர் ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 136 வாக்குகளை பெற்றால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் ஷர்மா ஒலிக்கு ஆதரவாக 93 வாக்குகளே பதிவானதால், ஷர்மா ஒலி அரசு பெரும்பான்மையை இழந்து தோல்வியை தழுவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.