மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிராக, டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், சாகர் தன்கட் இருவரும் ஒரே…

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிராக, டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், சாகர் தன்கட் இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்ட நிலையில், 23 வயதான, சாகர்தானை கடத்திச்சென்று சுஷில் குமார் உள்ளிட்டோர் தாக்கியதாக தகவல் வெளியானது. மேலும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், கொலை வழக்கு பதிவு செய்து போலீசார், சுஷில் குமார் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் சுஷில் குமார் தலைமறைவாக உள்ளதால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால், சுஷில் குமார் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத வகையில், அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.