நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் – கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!!

நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் –…

நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை ஆகிய 2 வழித்தடங்கள் என நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நெல்லை – சென்னை இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை இன்று காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில், 8 வந்தே பாரத் ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார்.

நெல்லையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வந்தே பாரத் விரைவு ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மற்றும் தாம்பரம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்றும், வாரத்தில் செவ்வாய்கிழமையை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.