திருப்பதியில், பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் பேருந்தை கடத்தி சென்ற மர்ம நபர்; போலீசார் விசாரணை….

திருப்பதியில், பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் பக்தர்களை அழைத்துச் செல்வதற்காக தேவஸ்தானம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதில் ஒரு பேருந்தை…

திருப்பதியில், பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படும் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் பக்தர்களை அழைத்துச் செல்வதற்காக தேவஸ்தானம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதில் ஒரு பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, மர்ம நபரால் கடத்தப்பட்ட பேருந்து, நாயுடுபேட்டை பகுதியில் நின்றிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பேருந்தை மீட்டனர். பேருந்தை கடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.