நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழும் இருக்கும்:வைகோ

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நெல்லை கண்ணன் இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நெல்லை கண்ணன் இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவரது உடல் நெல்லை டவுணில் உள்ள அம்பாள் சன்னதி தெருவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை கண்ணனின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான் சமய நிகழ்ச்சியாக இருந்தாலும் பட்டிமன்றமாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார். இந்த வீட்டிற்கு ராஜீவ் காந்தி வந்து உணவு அருந்தி விட்டு சென்றதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளார்.

காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாகக் கொண்டு காங்கிரஸில் செயல்பட்டவர் அவரது இறப்பு என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமயம் இலக்கியம் பட்டிமன்றம் எதுவாக இருந்தாலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆற்றல் மிக்கவராக இருப்பார். அரசியலில் அவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்காமல் சென்று விட்டாலும் நெல்லை மாவட்ட மக்களின் மனதில் இருந்து அவர் ஒருபோதும் மறைய போவதில்லை. அதோடு நெல்லை இருக்கும் வரை நெல்லை கண்ணனின் புகழும் இருக்கும் என்று கூறினார். இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பெரிய இழப்பாக உள்ளது, அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளேன் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.