தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நெல்லை கண்ணன் தொடுத்த வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
நெல்லைக் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை CAA திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 2019டிசம்பர் 29ல் SDPI கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய போது பிரதமர் மோடி குறித்தும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்தும் அவதூறாக பேசியதாகக்கூறி பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நெல்லை மாவட்ட பேச்சு வழக்கிலேயே “ஜோலியை முடிக்கலியா?” என பேசப்பட்டது. அதன் பொருள் வேலை. அதாவது அரசியலில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொணரவில்லையா? எனும் நோக்கிலேயே அவ்வாறு பேசப்பட்டதே தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் அல்ல. ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த வழக்கு என்று நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.