முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் – இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி, நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் 3,170 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்களில் 50 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை, பின்வாங்க போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இது என்ன புத்தக கடையா? மனதின் மருந்தகமா?

Jayasheeba

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நடை திறப்பு

Web Editor

தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!