உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை முக்கியம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதால், இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க சர்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி
இதன் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் புதினை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மாஸ்கோவில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், தமது கண்ணோட்டத்தின்படி உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை அவசியம் என்றும், அதனால் ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய புதின், ஐரோப்பியாவின் பாதுகாப்பை கட்டமைத்தலில் பிரான்சின் பங்கை பாராட்டினார். மேலும், உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்த மேக்ரானுக்கு புதின் நன்றி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








