முக்கியச் செய்திகள் தமிழகம்

“முககவசம் அணிவதில் அலட்சியம்” – சென்னை மாநகராட்சி

“வெளியே செல்லும் தனிநபர்கள் பொது இடங்களில் செல்லும் போது முககவசம் அணிவதிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதிலும் அலட்சியமாக இருக்கின்றனர்” என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் உள்ள பொது இடங்களில் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினரால் 16.08.2021 அன்று ஒரே நாளில் மட்டும் 1,278 தனி நபர்களிடம் முக கவசம் அணியாத காரணத்திற்காக ரூ.2,55,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.”

“ஜூன் மாதம் 2021 முதல் இதுநாள் வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 2,999 திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 70 இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.2,61,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 06.05.2021 முதல் இதுநாள் வரை 8,117 நிறுவனங்களிடம் இருந்தும், 48,033 தனி நபர்களிடம் இருந்தும் மொத்தமாக 03,81,63,591 (3.81) கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.”

“பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மூன்றாம் அலையை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் வெளியே செல்லும் தனிநபர்கள் பொது இடங்களில் செல்லும் போது முககவசம் அணிவதிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.” என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

2026 தேர்தலில் 60 இடங்களில் வென்றால் பாமக ஆட்சி: ராமதாஸ்

Ezhilarasan

’உண்மை தெரியாம அரைகுறையா கருத்து சொல்லாதீங்க’: ஷில்பா ஷெட்டி ஆவேசம்

Gayathri Venkatesan

பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மமதா போட்டி

Saravana Kumar