முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் நேற்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் இருந்து 1.10 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95 சதவீத கேள்விகள் தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தாவரவியல், வேதியியல் பாடங்களில் இருந்து 75 சதவீத வினாக்கள் மாநில அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 76 வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், 62 வினாக்கள் சராசரியாக இருந்ததாகவும், 62 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தாவரவியலில் 20 வினாக்கள் கடினம் என்றும், இயற்பியலில் 19 வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இயற்பியல் பாட வினாக்கள் கடினமாக இருந்ததாக நீட் தேர்வை எழுதியவர்கள் தெரிவித்திருந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் நேற்று மாலையுடன் பரப்புரை ஓய்ந்தது!

Halley karthi

குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!

Jeba Arul Robinson

முடிவுக்கு வந்தது 11 நாள் மோதல்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!

Halley karthi