தமிழ்நாட்டில் குறைந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் வெகுவாக குறைந்துள்ளதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2 அலையால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிக்கப்பட்டன. கடந்த மாதம் 6 ஆயிரத்து 22 இடங்கள்…

கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் வெகுவாக குறைந்துள்ளதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2 அலையால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிக்கப்பட்டன. கடந்த மாதம் 6 ஆயிரத்து 22 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும், தற்போது 3 ஆயிரத்து 724 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 623 இடங்களும், கோவையில் 578 இடங்களும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.