நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 65 நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. எரிபொருள் நிறுவனங்கள் விலையை ஏற்றிக்கொள்ளவும், குறைத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ன. இந்நிலையில் சமீபத்தில் எப்போதும் இல்லா அளவில் பெட்ரோல், டீசல் ரூ.100ஐ கடந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவ.3ம் தேதி பெட்ரோல் ரூ.106.66க்கும், டீசல் ரூ.102.59க்கும் விற்பனையானது. அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அரசு, 3ம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்து 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதனையடுத்து 65 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.








